பட்டா வழங்கக்கோரி கருப்புக்கொடியுடன் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்ஓசூர் அருகே பரபரப்பு


பட்டா வழங்கக்கோரி கருப்புக்கொடியுடன் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து  தர்ணா போராட்டம்ஓசூர் அருகே பரபரப்பு
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே பட்டா வழங்கக்கோரி கருப்புக்கொடியுடன் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராமமக்கள் எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் சென்னசந்திரம் ஊராட்சிக்குட்பட்டஉலியாளம் கிராமத்தில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அரசு சார்பில் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்ெகாண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் உலியாளம் கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தங்கள் வீடுகள் மீது கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். ஆனால், அதிகாரிகள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நேற்று ஊரின் நுழைவுவாயிலில் கருப்புக் கொடிகளை கட்டினர்.

தர்ணா போராட்டம்

மேலும் அவர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியவாறு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் ஓசூர் தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story