ஈரோட்டில் த.மு.மு.க.வினர் ரெயில் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு


ஈரோட்டில் த.மு.மு.க.வினர் ரெயில் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
x

ஈரோட்டில் த.மு.மு.க.வினர் போராட்டத்தின்போது ரெயில் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் த.மு.மு.க.வினர் போராட்டத்தின்போது ரெயில் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோடு ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.மு.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு ஒன்று திரண்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.சித்திக் தலைமை தாங்கினார்.

மாநில தொண்டர் அணி பொருளாளர் பவானி முகம்மது, மருத்துவ சேவை அணி துணைச்செயலாளர் பவுசில் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இதற்காக மத்திய பிரதேசத்தில் போராடியவர்களின் வீடுகளை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

ரெயில் மறியலுக்கு முயற்சி

இதற்கிடையில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒரு பிரிவினர் ஈரோடு காளை மாட்டு சிலை எதிரே உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு செல்லும் வழியாக நுழைந்து ரெயில் மறியலுக்கு முயன்றனர். அப்போது ரெயில்வே போலீசார் அவர்களை தடுத்து அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார், த.மு.மு.க.வினர் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story