சத்தியமங்கலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், மாவட்ட துணை தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தூய்மை பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் ஆணையம் அமைக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்வதை ஒழிக்க வேண்டும்.
வங்கி கணக்கில் சம்பளம்
மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் திட்டத்தில் நடக்கும் மோசடியை தடுக்க வேண்டும், சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோரிடம் வழங்கினார்கள்.
சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிகள் மற்றும் கடம்பூர், தாளவாடி பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் சுமார் 500 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.