பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம்


பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம்
x

கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் பா.ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தி.மு.க., அரசை கண்டித்து கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் முனிராஜு, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோவிந்தராஜ், சங்கர், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி தலைவி விமலா குமார், நிர்வாகிகள் தர்மலிங்கம், கோவிந்தராஜ், சங்கர், கிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி சக்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

தி.மு.க. அரசை கண்டித்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், ஓசூர் ராம்நகரில் உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் மனோகர், அன்பரசன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில், மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் பேசினார். இதில், மாநில அமைப்புசாரா பிரிவு துணைத்தலைவர் சீனிவாசன், தொழில்துறை பிரிவு செயலாளர் ராமலிங்கம், வர்த்தக பிரிவு துணைத்தலைவர் சுதா நாகராஜன், நிர்வாகிகள், பிரவீன்குமார், முருகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story