அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தமூர்த்தி, சங்க தணிக்கையாளர் லோகநாதன், உதவி செயலாளர்கள் திருமால், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜப்பா நன்றி கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ஊழியர்கள் அவசர தேவைகளுக்கு விடுப்பு கேட்டால் தர மறுக்கும் கிழக்கு உட்கோட் ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு கண்டனம் தெரிவிப்பது. ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குழந்தைகள் கல்வி உதவித்தொகை மற்றும் கம்பைன் பணி அலவன்ஸ் தொகையை வழங்க மறுப்பதை கண்டிப்பது குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story