புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு: தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்- அம்மாபேட்டையில் நடந்தது


புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு: தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்- அம்மாபேட்டையில் நடந்தது
x

புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு: தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்- அம்மாபேட்டையில் நடந்தது

ஈரோடு

அம்மாபேட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் இறையூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கோரியும், புதுக்கோட்டை மாவட்டத்தை தீண்டாமை மாவட்டமாக அறிவிக்ககோரியும், தமிழ்நாடு முழுவதும் தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அதன்படி ஈரோடு வடக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக அம்மா பேட்டையில் பாரதியார் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குரு செம்பன் முன்னிலை வகித்தார். தமிழ் புலிகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் எம்.முத்துக்குமார் கண்டன உரை ஆற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிதி செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குயிலி பேரவை செயலாளர் நந்தினி, அம்மாபேட்டை தொண்டர் அணி செயலாளர் முரளி, பவானி ஒன்றிய செயலாளர்ஆறுமுகம், பவானி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் வீரக்குமார், திராவிடர் கழக இளைஞர் அணி மணிமாறன், திராவிடர் விடுதலைக் கழகம் கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் மாநில வணிகர் அணி செயலாளர் ஈஸ்வரன், இளம்புலி செயலாளர் தினேஷ், தனுஷ், பெருமாள், மகளிர் அணி மகேஸ்வரி, பூர்ணிமா உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சேதுபதி நன்றி கூறினார்.


Next Story