அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
அந்தியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் சாவித்திரி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் கார்டை மாற்றி தரவேண்டும். அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.மாரிமுத்து, ஏ.கே.பழனிசாமி, மாரிமுத்து உள்பட அந்தியூர் வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இளஞ்செழியனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.