ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 8-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 8-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஈரோடு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 6 பணியாளர்களை மீண்டும் அதே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 31-ந் தேதி காலையில் ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். கடந்த 2-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டமாக மாற்றப்பட்டது. இந்தநிலையில் 8-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் சுமார் 30 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story