அந்தியூரில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்


அந்தியூரில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
x

அந்தியூரில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

ஈரோடு

அந்தியூர்

வெளிமாநில தொழிலாளர்கள் அந்தியூர் பகுதியில் கடைகள் அமைப்பதால் முடிந்திருக்கும் தொழிலாளர்களின் தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது என்று கூறி கடந்த ஒரு வாரமாக கடையடைப்பு போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்று அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் தாமோதரன் தலைமையில் முடி திருத்தும் தொழிலாளர்கள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட மாநில தொழிலாளர்களை வைத்து சலூன் கடை நடத்துபவர்கள் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் கடையில் வேலைக்கு வைத்து கொள்ள வேண்டும். சவர தொழிலாளர் நலசங்கத்திற்கு கட்டுப்பட வேண்டும். அனைத்து சாதியினரும், அனைத்து வேலைகளையும் செய்யலாம் இதை தடுக்க கூடாது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள். இதையடுத்து போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டு மாலையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.


Next Story