கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்


கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

இடங்கணசாலை சின்னேரி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

இளம்பிள்ளை

இடங்கணசாலை அருகே உள்ள சாத்தம்பாளையம் சின்னேரி பகுதியில், தனியார் ஒருவர் மண், களிமண் ஆகியவற்றை அரசு அனுமதியின்றி அள்ளுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் மண் கடத்தலை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு, மகுடஞ்சாவடி வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story