கிராம மக்கள் பட்டினி போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்பட்டி ஊராட்சியில், ஜாலிகாடு, கிருஷ்ணாபுரம், அண்ணா நகர், ஆலமரத்தூர், காளிப்பேட்டை உள்ளிட்ட 14 கிராமங்கள் உள்ளன. இதில் காளிப்பேட்டையில் உள்ள ஒரு சமுதாயத்தை சேர்ந்த 45 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று கிராம மக்கள் காளிப்பேட்டையில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன், தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story