காங்கிரசார் வாயில் துணி கட்டி போராட்டம்


காங்கிரசார் வாயில் துணி கட்டி போராட்டம்
x

பர்கூரில் காங்கிரசார் வாயில் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், நகர காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மாலை வாயில் கருப்பு துணி கட்டி அறப்போராட்டம் நடந்தது. நகர தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நடராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயபிரகாஷ், சேகர், மாநில செயலாளர் ஆறுமுகம், மூத்த வக்கீல் அசோகன், இளைஞர் அணி மாநில பொதுசெயலாளர் விக்னேஷ் பாபு, எஸ்.சி., எஸ்.டி. துறை மாநில பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது மத்திய அரசைக் கண்டித்தும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ., அரசுக்கு முடிவு கட்டும் வகையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைவரும் இந்த நாளில் துணை நிப்போம் என்று கோஷங்கள் எழுப்பினர்.


Next Story