கோபியில் சாலைப்பணியாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்


கோபியில் சாலைப்பணியாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்
x

கோபியில் சாலைப்பணியாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்

ஈரோடு

கடத்தூர்

கோபி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க கோட்ட தலைவர் முருகவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்நாதன், வட்ட கிளை செயலாளர் பழனிவேலு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்க மாவட்ட துணைத்தலைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை பணியாளர்களுக்கு மழைக்கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சாலைப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story