கோபியில் தொடர்ந்து 4-வது நாளாக சாலைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோபியில் தொடர்ந்து 4-வது நாளாக சாலைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

கோபியில் தொடர்ந்து 4-வது நாளாக சாலைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு

கடத்தூர்

சாலைப்பணியாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டியல் வெளியிட்டதில் முரண்பாடுகள் உள்ளதால், அதை மாற்றி அமைக்க வேண்டும். நம்பியூர் கோட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்களுக்கு மாநகர ஈட்டுப்படியை விரைந்து வழங்க வேண்டும். கோபி கோட்டத்தில் பணிபுரியும் சாலைப்பணியாளர்களுக்கு மழைக்கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர்கள் உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டம் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் நடந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story