கீழ்பவானி வாய்க்கால் கரையில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

கீழ்பவானி வாய்க்கால் கரையில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
x

கீழ்பவானி வாய்க்கால் கரையில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் கரையில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு தரப்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெருந்துறை- ஈரோடு ரோடு கூரபாளையம் பிரிவில் பந்தல் அமைத்து விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் அவ்வப்போது வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விவசாயிகள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் இதுவரை 2 பேர் மயங்கி விழுந்துள்ளனர்.

5-வது நாளாக...

இதைத்தொடர்ந்து நேற்று 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். மொத்தம் 28 விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்கள் எழுந்து உட்கார முடியாத நிலையில் படுத்தபடியே போராட்டம் நடத்தினார்கள்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கீழ்பவானி பாசன பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூரபாளையம் பகுதிக்கு வந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் அமர்ந்திருந்தனர்.

Next Story