கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி மத்தூர் போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி
மத்தூர்
மத்தூர் போலீசார் கிட்டனூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (வயது34). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த முருகன் (70) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இளையராஜா மீது போலீசார் பொய் வழக்கு போட முயற்சிப்பதாக கூறி அவரது மனைவி கமலாதேவி தனது கைக்குழந்தையுடன் போலீஸ் நிலையம் முன்பு தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து கலைந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story