ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டம்


ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டம்
x

ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 1.1.2022 அன்று அறிவித்த 31 சதவீதம் டி.ஏ. உயர்வுக்கான உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வழங்கவேண்டும். அந்த உத்தரவின் அடிப்படையில் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு ரூ.4,800 ஊதியமும், சிறப்பு காலமுறை ஊதியம் வாங்கக்கூடிய துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.7,450 ஊதியம் இந்த வட்டாரத்தில் போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்கண்ட ஊதியங்கள் வழங்கப்பட வேண்டும். வாழைக்குறிச்சி ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கான கூடுதல் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசமலை ஊராட்சியில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற பழனியம்மாள் என்கிற துப்புரவு பணியாளரை எந்தவித உத்தரவும் இல்லாமல் வாய்மொழியாக வேலையை விட்டு நீக்கியது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சதாசிவத்திடம் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.முகமது அலி ஜின்னா தலைமையில் வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் முகமது அனிபா, நிர்வாகிகள் தீன், திருக்களம்பூர் சந்திரன், செபஸ்டியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story