தமிழ் தேசிய கட்சியினர்கழுத்தில் தூக்குகயிறு மாட்டி நூதன போராட்டம்


தமிழ் தேசிய கட்சியினர்கழுத்தில் தூக்குகயிறு மாட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் தேசிய கட்சியினர் கழுத்தில் தூக்குகயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ் தேசிய கட்சி சார்பில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி, நூதன போராட்டம் நடந்தது. இதற்கு. மாநில துணைத்தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முல்லைநாதன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் சூரியா வரவேற்றார்.

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான டாக்டர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், பொன்னேரி புறவழிச்சாலை நான்கு முனை சந்திப்பு பகுதியை விரிவுப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திக் குமார், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் வேலு, அஜித்குமார், அய்யப்பன், வினோத்குமார், ரகுமான் பாஷா, ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.


Next Story