தேசிய சாகச முகாமில் பங்கேற்ற சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி தேர்வு
தேசிய சாகச முகாமில் பங்கேற்ற சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி தேர்வானார்
தேசிய சாகச முகாமில் பங்கேற்ற சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி தேர்வானார்
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை நாடு முழுவதும் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளுக்கு சாகச பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 நாட்கள் கொண்ட தேசிய சாகச முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டம் நார்கண்டா பகுதியில் நடக்கிறது.
மாணவ-மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி, ஆற்றை கடக்கும் பயிற்சி, இரவு வழி செலுத்துதல், தாவரங்கள், விலங்குகளை கண்டுபிடித்தல் ஆகிய பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த முகாமுக்கு 10 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவி வனபார்வதி (விலங்கியல் துறை 3-ம் ஆண்டு) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு கல்லூரி மாணவி வனபார்வதி மட்டுமே ஆவார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், வனபார்வதியை முகாமுக்கு வழி அனுப்பி வைத்தனர்.