கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x
தினத்தந்தி 24 April 2023 12:30 AM IST (Updated: 24 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் உள்ள சேலம் மெயின் ரோடு அவ்வை நகர் பகுதியை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி கிருஷ்ணகிரி அருகே ஒரப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story