அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை


அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
x

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம்,

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் ராமநாத புரத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், நாதசுவரம், தவில், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகிய கலைகளில் சிறந்த இசை ஆசிரியர் களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடை பெற்று வருகின்றன. 12 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சிக் கட்டணம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.350-ம், 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325 மட்டும் கட்டண மாக வசூலிக்கப்படும்.

அரசு வழங்கும் சலுகை, இலவச பஸ் பயண அட்டை, கல்வி உதவித்தொகை மாதம் ரூ.400, அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும். மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. சான்றிதழ்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளிலும், இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோவில்களிலும் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் ராமநாத புரம் அரண்மனை அருகே உள்ள கவுரிவிலாஸ் வளாகத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி சேர்ந்து கொள்ளலாம்.Next Story