அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு


அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
x

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கடலூர்

புதுப்பேட்டை,

அண்ணாகிராமம் ஒன்றியம், தொரப்பாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரசு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் விந்தியகுமாரி முன்னிலை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு தொரப்பாடி பகுதியில் வீடுகள்தோறும் நேரடியாக சென்று அங்கிருந்த மக்களிடம், மாணவர்கள் சிறந்த கல்வி பெற அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


Next Story