அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
மசினகுடி அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கூடலூர்,
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மசினகுடி அருகே பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி குறும்பர் பள்ளம், குறும்பர் பாடி, தக்கல் உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களுக்கு சென்று முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மசினி, சர்வ சிக்க்ஷா அபியான் தலைவர் புஷ்பா, ஆசிரியர்கள் விக்னேஷ், ராஜேந்திரன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி நன்றி கூறினார்.