தென்னாங்கூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்


தென்னாங்கூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்
x

தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் இன்று முதல் செயல்படும் என கல்லூரி முதல் வெண்ணிலா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் இணை வழியில் விண்ணப்பிக்க மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட உள்ளது.

மேலும் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையும், முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி வரையும், 2-ம்கட்ட பொதுக் கலந்தாய்வு ஜூன் 12-ந்தேதி முதல் ஜூன் 20-ந்தேதி வரையும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி தொடங்கும்.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் கு.வெண்ணிலா தெரிவித்துள்ளார்.


Next Story