உடுமலை அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


உடுமலை அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
x

உடுமலை அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்

தளி

உடுமலை அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

அரசு கல்லூரி

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024 -ம் கல்வி ஆண்டிற்குரிய இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட உள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ.தமிழ் இலக்கியம் (60), ஆங்கில இலக்கியம் (60), பொருளியல் (50), அரசியல் அறிவியல் (50), பிகாம் (60), பி.காம்.சிஏ (60), பிகாம் மின் வணிகம் (60), பிபிஏ (60), பி.எஸ்ஸி இயற்பியல் (48), வேதியியல் (48), கணிதம் (48), தாவரவியல் (20), புள்ளியியல் (40) பி.எஸ்ஸி கணினி அறிவியல் ஷிப்ட்1 (50), பி.எஸ்ஸி கணினி அறிவியல் ஷிப்ட் 2 (30) பிகாம் ஷிப்ட் 2 (60), பி.ாம்சிஏ ஷிப்ட் 2 (60) ஆகிய இளநிலைப் பட்டவகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக இன்று (திங்கள்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம். போலியான இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டாம்.

வழிகாட்டும் மையம்

மாணவர்கள் தங்கள் செல்பேசி, மடிக்கணினி, கணினி வாயிலாக விண்ணப்பிக்கலாம். கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை தகவல் வழிகாட்டு மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும்.

முதலில் மாணவர் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் முதலான விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவரவர் சேர விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்து அந்தக் கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.

ஐந்து கல்லூரியில் விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதுமானது. ஆனால் ஐந்திற்கு மேற்பட்ட கல்லூரியைத் தேர்வு செய்யும்போது அடுத்த ஐந்து கல்லூரிக்குக் கூடுதலாகப் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக்கட்டணம் ரூ 2 மொத்தம் ரூ50 (ஐம்பது மட்டும்) ஐ டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணையவழியில் செலுத்தலாம். எஸ்.டி., எஸ்டி., எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசியமாணவர் ை சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தச் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள் அதற்கான ஆதாரச் சான்றிதழ் நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாவட்ட, மாநில அளவிலான சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் (கல்வி மாவட்டம் மட்டும் ஏற்க இயலாது) மட்டுமே விளையாட்டுப் பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும். மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தரவரிசை பட்டியல்

கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் 26-ந் தேதி காலை வெளியிடப்படும்.

29-ந் தேதி சிறப்புப் பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெறும். 30-ந் முதல் பிற பிரிவினருக்கான முதல் கட்டக் கலந்தாய்வு அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

-------------


Next Story