ரஷியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாததால் மாணவி தற்கொலை முயற்சி

ரஷியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாததால் மாணவி தற்கொலை முயற்சி
x

குடும்ப வறுமை காரணமாக ரஷியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாததால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தங்கள் மகள் மருத்துவ படிப்பை தொடர தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

குடும்ப வறுமை காரணமாக ரஷியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாததால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தங்கள் மகள் மருத்துவ படிப்பை தொடர தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷியாவில் மருத்துவ படிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி பார்வதி. இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுடைய மகள் கிருத்திகா(வயது 21). ரஷியாவில் மருத்துவம் படித்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக அக்கம், பக்கத்தினரின் உதவியால் கிருஷ்ணமூர்த்தி தனது மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்தி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுமுறைக்காக மாணவி கிருத்திகா சொந்த ஊருக்கு வந்தார்.

தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்து வந்தார். இந்த ஆண்டு கிருஷ்ணமூர்த்தியால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என தெரிகிறது. இதனால் கிருத்திகா ஆன்லைன் மூலம் படிக்க முடியாத நிலையும், ரஷியாவுக்கு மீண்டும் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

மாணவி தற்கொலை முயற்சி

குடும்ப வறுமை காரணமாக ரஷியாவில் மருத்துவ படிப்பு தொடர முடியாததால் மனமுடைந்த கிருத்திகா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசு உதவ கோரிக்கை

குடும்ப வறுமையின் காரணமாக ரஷியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாத தங்கள் மகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story