ஆசிரியை வீட்டில் மாணவி தற்கொலை


ஆசிரியை வீட்டில் மாணவி தற்கொலை
x

மதுரையில், ஆசிரியை வீட்டில் மாணவி தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

மதுரையில், ஆசிரியை வீட்டில் மாணவி தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியை

மதுரை செல்லூர் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). டெய்லர். இவருடைய மகள் காவியா (19). இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது அவரை வீட்டுக்கு அழைத்து ஆசிரியை, பாடம் சொல்லி கொடுத்தார்.

அவர் பிளஸ்-2வில் தேர்ச்சி பெற்று, தற்போது ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். அதன்பின்னரும் மாணவி காவியா, அடிக்கடி அந்த ஆசிரியை வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அதை அறிந்த அவரது தந்தை, மகளை சத்தம் போட்டுள்ளார்.

இதனால் கோபித்து கொண்ட அந்த மாணவி, சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ஆசிரியை வீட்டிற்கு சென்றுவிட்டார். பெற்றோர் போலீசில் புகார் அளித்து தேடிய போது காவியா, ஆசிரியை வீட்டில் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை மீட்டனர். பின்னர் ஆசிரியை வீட்டிற்கு செல்லக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலை

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று, அங்கு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் திடீரென்று ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார். அவரை உறவினர்கள் தேடி பார்த்தனர்.

பின்னர் ஆசிரியை வீட்டிற்கு சென்று பார்த்த போது, விடுமுறை என்பதால் அவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். அதனால் வீடு பூட்டி இருந்தது. ஆனால் போலீசார் சந்தேகப்பட்டு பின்னால் சென்று பார்த்த போது அங்கு காவியா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கடிதம் சிக்கியது

மேலும் அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் எனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை. இந்த சம்பவம் குறித்து ஆசிரியை குடும்பத்தினரை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி இறப்பு குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story