மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
ஆம்பூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்
ஆம்பூர்
ஆம்பூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் தரணி. இவரது மகன் கார்த்திக் (வயது 20),் ஆம்பூர் அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story