நாகர்கோவிலில் காதலன் இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை;குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு


நாகர்கோவிலில் காதலன் இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை;குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
x

நாகர்கோவிலில் காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் மாணவி பிணம்

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல தெருக்கரையை சேர்ந்தவா் பெலார்மின் அமிர்தராஜ். இவரது மகள் சகாய ஜான்சிலா (வயது 21). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வெளியே இருந்து சகாய ஜான்சிலா பெயரை கூறியபடி கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் ஏதோ அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதோ? என பதற்றமடைந்த அவர்கள் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு சகாய ஜான்சிலா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பாா்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகாய ஜான்சிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

பின்னர் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், காதலன் இறந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. தற்கொலை செய்து கொண்ட சகாய ஜான்சிலா கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த மாணவர் சாலை விபத்தில் பலியாகி விட்டார். காதலன் இறந்த சம்பவம் சகாய ஜான்சிலாவை பெரிதும் பாதித்தது.

இதன் காரணமாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். கல்லூரியில் தோழிகள் மத்தியிலும் சோகமாகவே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலன் விபத்தில் இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story