கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருச்சியில் கல்லூரி மாணவி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

திருச்சி

திருச்சியில் கல்லூரி மாணவி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

கல்லூரி மாணவி

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையை சேர்ந்தவர் முகமது சித்திக். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அப்ரின் பாத்திமா (வயது 21). இவர் திருச்சியில் உள்ள அய்மான் பெண்கள் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

மேலும் அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் புத்தாண்டு விடுமுறையையொட்டி தோழிகள் பலர் ஊருக்கு சென்றுவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே விடுதியில் தங்கி இருந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதேபோல் அப்ரின் பாத்திமாவும் ஊருக்கு செல்லாமல் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு, அவர் ேதாழிகளிடம் பேசிவிட்டு, விடுதிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் அப்ரின் பாத்திமா தங்கி இருந்த விடுதி அறை நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சகதோழிகள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் அப்ரின் பாத்திமா பிணமாக கிடந்தார். இது குறித்து தோழிகள் விடுதி வார்டன் அமல் பேகத்திடம் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

தொடர்ந்து போலீசார் விடுதி அறையில் சோதனை நடத்தியதில், மாணவி அப்ரின் பாத்திமா ஆங்கிலத்தில் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், `எனது தாய், தந்தைக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அவர்களை எனக்கு பிடிக்கவில்லை. இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி அப்ரின் பாத்திமா தற்கொலை செய்ததற்கான காரணம்? என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story