என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வந்தவாசி அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் கிஷோர்காந்த் (வயது 21) 4-ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார்.

கிஷோர்காந்த் இன்று காலை வயிற்றுவலி இருப்பதாக சக மாணவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் கிஷோர்காந்த் மதியம் திடீரென விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிஷோர்காந்த் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கிஷோர்காந்துக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாகவும் காலையில் சக மாணவர்களிடம் வயிற்றுவலி அதிகமாக உள்ளது என கூறியதாக தெரியவந்தது.

மேலும் பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story