கருங்கலில் மாணவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கருங்கலில் மாணவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருங்கல்,
கருங்கலில் மாணவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை ஆந்திராவில் டோல்கேட் ஊழியர்கள் மற்றும் ஆந்திராவை சேர்ந்த நபர்கள் தாக்கியதை கண்டித்தும், மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் கருங்கல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் கிறிஸ்டி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய டோல்கேட் ஊழியர்கள் மற்றும் குண்டர்கள் மீது ஆந்திரா அரசு உடனே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், கருங்கல் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்மணி, மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜித், மாணவர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சுனித் ஜோபின், கிழக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரபின், திருவட்டார் வட்டார காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாண் வெர்ஜின் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.