கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சுழலில் சிக்கிய மாணவன் பிணமாக மீட்பு


கம்பைநல்லூர் அருகே  தென்பெண்ணை ஆற்றில் சுழலில் சிக்கிய மாணவன் பிணமாக மீட்பு
x

கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சுழலில் சிக்கிய மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.

தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மணி என்கிற தினேஷ் (வயது 15). இவன் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் கடந்த 12-ந்தேதி நண்பர்களுடன் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றான். அப்போது ஆற்றில் இறங்கி குளித்தபோது அங்குள்ள சூழலில் மாணவன் தினேஷ் சிக்கி கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பைநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாணவனை தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் தீயணைப்பு படையினர் மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆற்றில் பாறை இடுக்கில் இருந்து மாணவனின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story