மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு
கோவில்பட்டியில் மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பேரவை கூட்டம்
நடந்தது. கூட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ரஜினி கண்ணம்மா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேரவை கொடியேற்றி வைத்தார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவராக ஜெ. ராஜா, செயலாளராக பி. பாலாஜி, பொருளாளராக அபிஷேக் சிங், துணை தலைவராக ரஜினி கண்ணம்மா, நகர செயலாளராக சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை பாராட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், துணை செயலாளர் ஜி. பாபு, நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் நகர நிர்வாகிகள் முனியசாமி, அலாவுதீன், தாலுகா செயலாளர் லெலின் குமார், துணை செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story