மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவன்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் தீபக் (வயது 12).
குமரலிங்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து புத்தகப்பையுடன் பள்ளிக்கு செல்வதாகக் கூறி விட்டு சென்ற தீபக் பள்ளிக்கு செல்லவில்லை.
ஆனால் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ்வரன், 8-ம் வகுப்பு படிக்கும் நந்தகிஷோர் ஆகியோருடன் அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அங்கு குமரலிங்கம் ராமர் கோவில் படித்துறை பகுதியில் தீபக் தன்னுடைய ஆடைகளை புத்தகப் பையில் வைத்து ஆற்றங்கரையிலுள்ள நாணல் புதருக்குள் மறைத்து வைத்து விட்டு குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளான்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற தீபக் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டான். இதனை பார்த்த நண்பர்கள் இருவரும் கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆற்றில் இறங்கி தேடியும் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிணமாக மீட்பு
இதையடுத்து குமரலிங்கம் போலீசார் மற்றும் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. .உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி தீபக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையிலிருந்த தீபக்கை பிணமாக மீட்டனர். பின்னர் தீபக் உடலை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.