பிளஸ்-2 மாணவன் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு


பிளஸ்-2 மாணவன் 3 நாட்களுக்கு     பிறகு பிணமாக மீட்பு
x

திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பிளஸ்-2 மாணவன் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பிளஸ்-2 மாணவன் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்

பூவந்தி அருகே உள்ள டி.அதிகரை கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் மகன் தீனதயாளன் (வயது 17). இவர் மணலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 9-ந் தேதி பிற்பகலில் திருப்புவனம் அருகே தட்டான்குளம் வைகை ஆற்றுக்கு மாணவன் குளிக்க சென்றார்.

வைகை ஆற்றில் அப்போது தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்தது. அது சமயம் குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மாணவரை தேடி பார்த்தனர். ஆனால் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததாலும், இரவு நேரம் ஆகிவிட்டதாலும் அன்று மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிணமாக மீட்பு

இதையடுத்து மறுநாள் காலை முதல் மாலை வரை மாணவரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அன்றும் மாணவரை கண்டுபிடிக்க முடியாததால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் மீண்டும் தேடும் பணி நடந்தது. அப்போது தட்டான்குளம் தடுப்பணை அருகே மாணவன் தீனதயாளன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து மாணவன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story