நண்பர்களுடன் விளையாடிய போது பாம்பு கடித்து மாணவன் சாவு


நண்பர்களுடன் விளையாடிய போது பாம்பு கடித்து மாணவன் சாவு
x

நண்பர்களுடன் விளையாடிய போது பாம்பு கடித்து மாணவன் இறந்தான்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

பனமரத்துப்பட்டி அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி வன்னியர் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் கவுதமன் (வயது 11). கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் பள்ளியில் அரையாண்டு தேர்வு எழுதி விட்டு மாலையில் வீட்டுக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாம்பு ஒன்று கவுதமனை கடித்துள்ளது. இதைக்கண்ட மற்ற சிறுவர்கள் பயந்து அலறி உள்ளனர். உடனே கவுதமன், வீட்டில் யாரிடமும் சொல்லாதீர்கள் என்று சக சிறுவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

இரவு 8 மணி அளவில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கவுதமன் மயங்கி விழுந்துள்ளான். உடனே 108 ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான், பாம்பு கடித்து சிறுவன் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story