குளத்தில் மூழ்கி மாணவர் பலி
மன்னார்குடி அருகே மாடு குளிப்பாட்டியபோது குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
மன்னார்குடி அருகே மாடு குளிப்பாட்டியபோது குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
பிளஸ்-1 மாணவர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலதிருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மகன் சிவனேசன் (வயது16).
இவர், ஆலங்கோட்டை திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
குளத்தில் மூழ்கி சாவு
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நேற்று அந்த பகுதியில் உள்ள வைகுண்டான் குளத்தில் சிவனேசன், தனது மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்து தண்ணீரில் மூழ்கினார்.
அப்போது அந்த வழியாக வந்தவர்கள் குளத்தில் ஒரு துண்டும், செருப்பும் மிதப்பதை கண்டு குளத்தில் இறங்கி தேடிப்பார்த்தனர். இதில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிவனேசன் உடலை அவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
சோகம்
இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவனேசன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி அருகே மாடு குளிப்பாட்டியபோது குளத்தில் மூழ்கி புளஸ்-1 மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.