தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு


தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு
x

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

கடலூர்

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே வி.ஆண்டி குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் விஷ்வா (வயது 18). தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) படித்து வந்தார். இவர் நேற்று காலை தனது நண்பர்களான நரேந்திரன் (20), ரிஷிதரன் (18), பாலமுருகன் (19), அபிஷேக் (18), பாலாஜி (19) ஆகியோருடன் கண்ட்ரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்று இருந்தார்.

அப்போது விஷ்வா, பாலாஜி ஆகிய இருவரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். உடன் சக நண்பர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பாலாஜியை மட்டும் அவர்களால் காப்பாற்ற முடிந்தது. விஷ்வாவை மீட்க முடியவில்லை.

பிணமாக மீட்பு

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் 2 மணி நேரத்திற்கு பின்னர், விஷ்வாவை பிணமாக மீட்டனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, விசாரித்தனர். பின்னர், விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story