நீச்சல்குளத்தில் மூழ்கி மாணவன் பலி
விருதுநகரில் நீச்சல்குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
விருதுநகரில் நீச்சல்குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
நீச்சல் பயிற்சி
விருதுநகர் இளங்கோவன் தெருவை சேர்ந்த வெங்கடேசன் -தங்க மீனா தம்பதியினரின் மகன் அருண்குமார் விக்ரம் (வயது 15). விருதுநகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் அருண்குமார் விக்ரம் நீச்சல் பயிற்சிக்கு நகரில் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு சென்றான்.
மாணவன் பலி
அப்போது அங்கு எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினான்.
உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீச்சல் பழக சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.