கண்மாயில் மூழ்கி மாணவன் பலி


கண்மாயில் மூழ்கி மாணவன் பலி
x

சாத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சங்கர் (வயது 17). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் சங்கர் தனது நண்பர்களுடன் சடையம்பட்டி அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது சங்கர் திடீரென நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் தண்ணீரில் மூழ்கிய சங்கரை தேடினர். பின்னர் இதுகுறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடல் மீட்பு

அதன்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சங்கரின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடல் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story