தண்ணீரில் மூழ்கி மாணவர் பலி


தண்ணீரில் மூழ்கி மாணவர் பலி
x

ஊட்டி அருகே தண்ணீரில் மூழ்கி மாணவர் பலியானார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே எமரால்டு தென்பழனி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஷ்ணு (வயது 17). இவர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்து இருந்தார். இதற்கிடையே கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக விஷ்ணு கூறி விட்டு சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. இதைதொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் அவரை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று எமரால்டு அணை முன்பு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக எமரால்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், விஷ்ணு அணை முன்பு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்ககாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story