மாணவருக்கு டெங்கு காய்ச்சல்
ஆற்காட்டில் மாணவருக்கு டெங்கு காய்ச்சல்
ஆற்காடு
ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெரு, தேவி நகர் பகுதியை சேர்ந்த மாணவர் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.
அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை ஆற்காட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது காய்ச்சல் அதிகமானதால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் மாணவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆற்காடு தேவி நகர் பாரதிதாசன் தெருவில் மாவட்ட மலேரியா அலுவலர் பிரேமா, ஆற்காடு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அனைத்து வீடுகளை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள், தேங்கியுள்ள நீர் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.
பின்னர் அனைத்து வீடுகளிலும் மருந்து தெளித்து, கொசு ஒழிப்பு புகை அடிக்கப்பட்டது.
அப்போது துப்புரவு அலுவலர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.