தீ விபத்தில் மாணவி காயம்


தீ விபத்தில் மாணவி காயம்
x

தீ விபத்தில் மாணவி காயம் அடைந்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் புவனேஸ்வரி (வயது 10). இவள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் புவனேஸ்வரி வீட்டில் சூடம் ஏற்றி விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் காயம் அடைந்த அவளை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story