மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி கல்லூரி மாணவர் பலி


மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி கல்லூரி மாணவர் பலி
x

பரமத்தி அருகே மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

கல்லூரி மாணவர்கள்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மெட்ரோ வாட்டர் ஒர்க்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் ரேணுபாபு (வயது 22). கேரளா மாநிலம், திருநக்கரா பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் அரவிந்த்நாகுலு (25). ஆந்திரா மாநிலம், இபுருபேலம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவரது மகன் ரவீந்திரபாபு (21). இவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர்.

இவர்கள் மூவரும் சொந்த வேலையாக காரில் பெங்களூரு சென்று விட்டு மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல பரமத்திவேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ‌இந்த நிலையில் பரமத்தி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மாணவர் பலி

இதில் காரில் வந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் ‌‌‌காரின் கதவுகளை உடைத்து 3 பேரையும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரேனுபாபு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம்

மேலும் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் அரவிந்தநாகுலு, ரவீந்திரபாபு ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story