மின்சாரம் தாக்கி மாணவன் பலி
போளூரில் மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
போளூர்
போளூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, எதப்பட்டு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மஞ்சுளா, கட்டுப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள்.
கடைசி மகன் அரவிந்த் (வயது 16) ஆரணி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று மாலை சுமார் 4 மணி அளவில் வீட்டு மாடியில் அரவிந்த் மற்றும் நண்பர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேலே செல்லும் உயர்அழுத்த மின்கம்பி அரவிந்த் மேல் பட்டது.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அரவிந்த் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் சென்று இறந்த அரவிந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.