9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்


9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
x

காடையாம்பட்டி அருகே ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஓமலூர்

காடையாம்பட்டி அருகே ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

9-ம் வகுப்பு மாணவி

காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் அந்த மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார்.

பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே உள்ள பிளாட்டுக்கு நைசாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி, நடந்த சம்பவங்களை அவரது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

கைது

இதுகுறித்து பள்ளி மாணவியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரவிக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story