போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பார்வையிட்ட மாணவர்கள்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பார்வையிட்ட மாணவர்கள்
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பார்வையிட்ட மாணவர்கள்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நடவடிக்கைகள் குறித்து நேற்று அவினாசியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


Next Story