மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

அடிப்படை வசதி செய்து தரக்கோரி, தனியார் தோட்டக்கலை கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே தனியார் தோட்டக்கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் மாணவ-மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவ, மாணவிகள் செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

தகவல் அறிந்து வந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்லூரியில் அடிப்படை வசதிகளை 15 நாட்களுக்குள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி நிறைவேற்றப்படும் என்று போலீசார் கூறினர். ஆனால் மாணவர்கள் சமரசம் ஏற்படாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story