திறனாய்வு தேர்வில் மாணவி வெற்றி
திறனாய்வு தேர்வில் செங்கோட்டை அருகே தெற்குமேடு பள்ளி மாணவி வெற்றி பெற்றார்.
தென்காசி
செங்கோட்டை:
மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில் செங்கோட்டை அருகே உள்ள தெற்குமேடு அரசு நடுநிலைப்பள்ளி மாணவி சுமித்தரா வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். சாதனை படைத்த மாணவியை செங்கோட்டை வட்டார கல்வி அலுவலா் ஜான்பிரிட்டோ, பள்ளி தலைமை ஆசிரியா் ஆல்பர்ட்செல்வின், ஆசிரியா் பயிற்றுனா்கள் சுப்புலட்சுமி, முத்துசரோஜினி, சுகந்தி, ஆசிரியா்கள் ஜான்பிரைட், பத்மாவதி, தனலெட்சுமி, செல்வி, ராஜேஸ்வரி, மைதிலி, தமிழ்ச்செல்வி, தன்னார்வ ஆசிரியா்கள் சாந்தி, அன்புமதி, பள்ளி மேலாண்மைக் குழுவினா், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினா்.
Related Tags :
Next Story